ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம், பாரனுார், சாத்தனுார், ஏந்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் முத்துமாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா, ஆக.3ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தினமும் இரவில் இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பக்தர்கள் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். கோயில் முன்பு தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.