சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் சந்தனமாரியம்மன், செல்வவிநாயகர், கருப்பசாமி, மாரியம்மன், பிழை பொருத்தம்மன் சாஸ்தா, பைரவ துர்கை ஆகிய தெய்வங்களுக்கு புரவி எடுப்பு விழா நடந்தது. ஆக., 1ல் காப்பு கட்டி கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் விரதம் இருந்து பால்குடத்துடன் ஊர்வலம் வந்தனர். நேற்று காலை மண் பொம்மையிலான குதிரை உருவம் செய்யப்பட்டு புரவி எடுக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.