இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. செவ்வாய் கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்த பெருமானை தரிசிக்க ஏராளமானோர் கோவிலுக்கு வருகின்றனர். இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி, கூட்டு வழிபாடும் செய்தனர்.