பதிவு செய்த நாள்
11
ஆக
2016
03:08
வாழ்வில், மனிதருக்குத் தேவையான உயர்ந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தருளக்கூடியவள் மகாலட்சுமி தேவி. பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, மேரு மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தபோது, உயர்ந்த பல விஷயங்கள் உதித்தன. அந்தத் தருணத்தில் தோன்றியவளே மகாலட்சுமி. இங்ஙனம் அவள் அவதரித்த திருநாளே, வரங்கள் யாவற்றையும் பெற்றுத் தரும் வரலட்சுமி விரத் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. வருடந்தோறும், ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி பூஜை கடைப்பிடிக்கப்படுகிறது. சில வருடங்களில் வெள்ளிக்கிழமையானது ஆடி மாதத்திலும் வரும்.
லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு. ஏனெனில், லட்சுமிதேவியை இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால், இவை அனைத்தையுமே தந்து நம்மை மகிழச் செய்வாள், தேவி. நாமும் இந்நாளில், விரதம் இருந்து, உள்ளம் உருக அலைமகளை வழிபட்டு, நம் அல்லல்கள் யாவும் நீங்கப்பெறுவோம். எந்தவொரு விரத வழிபாட்டைக் கடைப்பிடிக்கும்போதும், அதன் மகிமையை அறிந்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
வரலட்சுமி விரதம் இருக்கும் முறை!