பதிவு செய்த நாள்
12
ஆக
2016
12:08
வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஒரு நிகழ்வாக மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம் நடத்தினர். திரளான பெண்கள் இதில் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கு பூஜாரி கல்யாணி தலைமை வகித்தார். ஆரிச்சம்மன் கோவில் கும்பாபிேஷகம் ஊத்துக்கோட்டை:ஆரிச்சம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், செஞ்சியகரம் ஊராட்சியில் உள்ளது ஆரிச்சம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவில் கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது மீண்டும் கோவிலுக்கு கும்பாபிேஷக விழா நடத்த கிராம மக்கள் முடிவெடுத்து, கோவிலை சீர்படுத்தினர். பணிகள் முடிந்த நிலையில் நேற்று காலை கும்பாபிேஷக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 06:00 மணிக்கு பிடாரி ஆரிச்சம்மனுக்கு அபிேஷகமும், 09:00 மணிக்கு தொடர்ந்து கலஸ்தாபனம், கும்பாபி ேஷகமும் நடந்தது. மதியம், 02:00 மணிக்கு பகுதிவாசிகள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு கரகம் புறப்பாடும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.