மாரியம்மன், செல்லியாண்டியம்மனுக்கு கரன்சி நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2016 02:08
பவானி: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பவானி சமயபுரம் மாரியம்மன் கோவில், செல்லியாண்டியம்மன் கோவிலில் சுவாமிக்கு, கரன்சி நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பவானி வர்ணபுரத்திலுள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு, மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான, புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. இதே போல் செல்லியாண்டியம்மன் கோவிலில், மூன்று லட்சம் மதிப்பில் புதிய கரன்சி நோட்டுகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.