கோத்தகிரி: கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவிலில், ஆடி மாத கடைசி கனி விளக்கு பூஜையும், வரலட்சுமி விரத பூஜையும் நடந்தது. அதிகாலையில் இருந்து, அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டது. விரதம் இருந்த பெண்கள் திருவிளக்கேற்றி, தாலி பாக்கியம் நீடிக்க, பூஜையில் பங்கேற்றனர்.தொடர்ந்து, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு இடம் பெற்றது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து, பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.