காமநாயக்கன்பட்டி பரலோக மாதா விண்ணேற்பு விழா தேர் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2016 12:08
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலய விண்ணேற்பு விழாவில் நேற்று காலை தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காமநாயக்கபன்பட்டியில் உள்ள பரலோக மாதா விண்ணேற்பு ஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா ஆக., 6 ல் துவங்கியது.விழா நாள்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, ஜெபமாலை,மறையுரை, நற்கருணை ஆசீர் நடை பெற்றன. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வாரணாசி பிஷப் யூசின் ஜோசப், பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. அதன் பின் அலங்கரிக்கப்பட்ட இரு ரதங்களில் தனித்தனியாக பரலோக மாதாவும், ஆரோக்கிய மாதாவும், புறப்பட்டு ரத வீதிகளில் வலம் வந்தனர். பின்பறத்தில் பக்தர்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன்களை செய்தனர். பின் பாதிரியார்கள்பங்கேற்ற சிறப்பு திருப்பலிகள் நடந்தது.ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி பாதிரியார் அருள்ராஜ், உதவி பாதிரியார் மாசிலாமணி, அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.