பதிவு செய்த நாள்
16
ஆக
2016
12:08
கரூர்: கரூர் மாவட்டம், பவித்திரம் விநாயகர், மருதகாளியம்மன், மலையம்மன், மணிவேல்சாமி, ஆனூர் அம்மன் புதுக்கோவில் கும்பாபிஷேக விழா வரும், 21ம் தேதி நடக்கிறது. கொங்கு வேளாளர் கவுண்டர்களின் காடை குலம், பயிரன் குலம் பங்காளிகளின் குடிபாட்டு கோவில் முகப்பு நுழைவு வாயிலில், அலங்கார வளைவு, ராஜகோபுரம், நால்வர் கோபுரம் என திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வரும், 17ம் தேதி இரவு கிராம சாந்தியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, 18ம் தேதி விநாயகர் வழிபாடு, 19ம் தேதி காலை காவிரியில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வருதல், முளைப்பாரி அழைத்தல், அன்று மாலை யாகசாலை பிரவேசம், பூஜைகள் நடைபெறும். வரும், 21ம் தேதி காலை மீனாட்சி சைவ புரந்திர பண்டித குருசுவாமிகள் ஆசியுடன், கபிலர்மலை செல்வ கபில சிவாச்சாரியார் தலைமையில் நடராஜ குருக்கள் மற்றும் குழுவினர் காலை, 6 மணிக்கு கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர். முன்னதாக, 19ம் தேதி இரவு இன்னிசை நிகழ்ச்சி, 20ம் தேதி இரவு விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் நாட்டுபுற நிகழ்ச்சி, 20ம் தேதி முதல், 21ம் தேதி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. திருப்பணியை சிற்ப கலா ரத்னம் வெற்றிவேல் ஸ்தபதி செய்துள்ளார். ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டியினர் மற்றும் பங்காளிகள் செய்துள்ளனர்.