ஆண்டிபட்டி: சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனி நாகராஜ, நாகம்மாள் கோயில் ஆடித்தபசு விழா நடந்தது. மங்கள இசையுடன் துவங்கிய மூன்று நாள் விழாவில் முதல்நாளில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கலச பூஜைகள் நடந்தது. பாராயணங்கள், கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், மகா பூர்ணாகுதி தீபாராதனை செய்யப்பட்டது. இரவில் சக்கம்பட்டி கிரகத்திடலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாம் நாளில் பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாள் தபசு விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள், அன்னதானம், அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.