விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி மகாதேவி கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. விக்கிரவாண்டி மகாதேவி கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. மகாதேவிக்கு அபிஷேகத்தை முன்னிட்டு, விக்கிரவாண்டி குளக்கரையிலிருந்து சக்தி கரகம் ஜோடித்து, 108 பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலம் வந்தனர். பின்னர், மகாதேவிக்கு பால் அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது.