15 அடி ஆழத்தில் கன்னியம்மன் கோவில்: கன மழையிலும் தண்ணீர் தேங்கியது இல்லை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2016 11:08
குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் கரை மீது, 15 அடி ஆழ பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவதே இல்லை. இதை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் வழிபட்டு செல்கிறனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் சிறுகளத்தூர் ஊராட்சி அருகே செம்பரம்பாக்கம் ஏரிகரையின், 19 கண் மதகு பகுதியில் கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. பல நு ாறு ஆண்டுகளுக்கு முன் செம்பரம் பாக்கம் ஏரி உருவாக்கப்பட்டபோது, ஏரிக்கரையின் மீது காவல் தெய்வமாக இந்த கோவில் அமைக்கப் பட்டுள்ளது. ஏரிக்கரை மீது அமைந்துள்ள இந்த கோவில், 15 அடி ஆழ ப ள்ளத்தில் உள்ளது. கனமழைபெய்தாலும் இந்த கோவிலின் உள்ளே தண்ணீர் தேங்கியது இல்லை. சிறிய கோவிலாக இருந்தாலும், பள்ளத்தில் அமைந்துள்ள இங்கு தண்ணீர் தேங்காத வகையில் கட்டப்பட்டிருப்பது இந்த கோவிலின் சிறப்பு. இந்த கோவிலை அப்பகுதி சுற்றுப்புறத்தில் உள்ள பலர் பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர்