வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடந்த ஆடி அமாவாசை விழாவை தொடர்ந்து உண்டியல் திறக்கப்பட்டது. 40 லட்சம் ரூபாய் வசூலானது. சதுரகிரி மலையில் ஜூலை 28 முதல் ஆக.,4 வரை ஆடி அமாவாசை விழா நடந்தது. இதற்கான உண்டியல் திறப்பு ஆக. 16, 17 தேதிகளில் மலையில் நடந்தது. மதுரை அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி, ஆய்வாளர்கள் அய்யம்பெருமாள், சோமசுந்தரம் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. சந்தன மகாலிங்கசுவாமி கோயிலில் 3.50 லட்சம் ரூபாய், சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலில் 34 லட்சம் ரூபாய், 35 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி உட்பட 40 லட்சம் ரூபாய் வசூலானது. இது கடந்த ஆண்டை விட 3 லட்சம் ரூபாய் கூடுதலாகும்.