பதிவு செய்த நாள்
22
ஆக
2016
11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சங்கர மடத்தில், மகா பெரியவரின் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று நடந்தது.காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்கள் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், மகா பெரியவர் என்றழைக்கப்படும், சந்திரசேகர சுவாமிகளின் பஞ்சலோக சிலை செய்யப்பட்டுள்ளது. இதை பிரதிஷ்டை செய்யும் விழா, நேற்று பகல், 11:00 மணிக்கு திருவண்ணாமலை சங்கர மடத்தில் நடந்தது.ருத்ர அபிஷேகம், உபநிஷத் பாராயணம், அலங்காரம், சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. பின், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம், தேவாரம், திருவாசக பாராயணம் ஆகியவை நடந்தன. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிலையுடன் கிரிவலம் சென்றனர். பின், சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.