பதிவு செய்த நாள்
22
ஆக
2016
01:08
ஆத்தூர்: ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், வெள்ளை விநாயகர் கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி விழா, நேற்று நடந்தது. அதில், வெள்ளை விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்தனர். பூக்கள், பழங்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாரதனை நடந்தது. இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், ராணிப்பேட்டை விநாயகர், கடை வீதி விநாயகர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், நரசிங்கபுரம் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.