வேதகிரீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரை தேடும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2016 01:08
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர், ஆக்கிரமிப்பு கடைகளால் மீண்டும் மறைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற சிவஸ்தலம். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் சுற்றுச்சுவர், சாலையோர கடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2ம் தேதி நடந்த லட்ச தீப விழாவிற்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட கடைகள், அடுத்த நாளே அங்கு முளைத்து விட்டன. இதைக்கண்டு பக்தர்கள் வேதனையடைகின்றனர்.