சின்னசேலம்: சின்னசேலம் காந்தி நகர் வீரபத்திர சுவாமி கோவிலில், முதல் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, மேல்பாதிவகையறா சார்பில், சக்தி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானமும், இரவு காந்திநகர் மாரியம்மன் கோவில் அருகே வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.