வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு வீரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர உற்சவ விழா நடந்தது. முதல்நாள் காப்புக்கட்டு , கரகம் எடுத்தல் நடந்தது. பெரியஊரணி கரையில் அம்மன் செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் தீச்சட்டி , நெய்பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாம் நாளில் பெண்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மாலையில் மஞ்சள் நீராட்டு , அருள்வாக்கு வைபவம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் கரகம் கரைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது. பெண்கள், பக்தர்கள் பூக்களை துாவி வழிபட்டு அம்மனை வழியனுப்பினர். மூன்றாம் நாளில் அன்னதானம், பள்ளயம் பிரித்தல் நிகழ்ச்சி நடந்தது. கார்காத்தார் உறவின் முறை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சு.கிருஷ்ணன், கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.