Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் கிருஷ்ண ... திருக்கழுக்குன்றம் திரவுபதியம்மன் கோவிலில் படுகளம் திருக்கழுக்குன்றம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் கிருஷ்ணஜெயந்தி விழா: சுவாமிக்கு தங்கத்தாமரை அர்ச்சனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவையில் கிருஷ்ணஜெயந்தி விழா: சுவாமிக்கு தங்கத்தாமரை அர்ச்சனை!

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
11:08

கோவை: பீளமேடு இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சுவாமிக்கு, தங்கத் தாமரையால், கனக கமல அர்ச்சனை’  நடந்தது. கோவை கொடிசியா அருகே உள்ள, இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில், நேற்று கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. காலை 4:15 மணிக்கு, மங்கள ஹாரத்தியுடன் கிருஷ்ணஜெயந்தி நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, சிருங்கார ஹாரத்தி,  ஸ்ரீமத் பாகவத  உபன்யாசம், அகண்டநாம சங்கீர்த்தனம், சுபமத்யான ஹாரத்தி, துளசி பூஜை, சந்தியா ஹாரத்தி ஆகியவை நடந்தன. இரவு உறியடி உற்சவம் நடந் தது. கிருஷ்ணர் வேடமணிந்த, குழந்தைகளும் பெரியவர்களும், உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு 10:00 மணிக்கு, மஹா அபிஷேகமும்,  அஷ்டோத்ர ஸத மஹா கலசாபிஷேகம், கனக கமல அபிஷேகமும் நடந்தது. பக்தர்களால் சுவாமிக்கு வழங்கப்பட்ட, 108 தங்கத்தாமரைகளால்,  சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

ஜெகன்நாதர் கோவிலில் வீற்றிருக்கும், பலதேவர், ஜெகன்நாதர், சுபத்ராதேவி ஆகியோருக்கு, கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி, புத்தாடைகள், புதிய  வஸ்திரங்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை  வழிபட்டனர். இஸ்கான்’ அமைப்பு சார்பில், ஸ்ரீமத் பாகவதம் சிறப்பு சொற்பொழிவும், அகண்ட நாம சங்கீர்த்தனமும் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த  பக்தர்களுக்கு, பிரசாதங்கள், பகவான் கிருஷ்ணரின் போட்டோக்கள் வழங்கப்பட்டன. கோவையிலுள்ள பெருமாள் கோவில்களிலும், கிரு ஷ்ணஜெயந்தி விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் பிறப்பை நினைவுபடுத்தும் வகையில், அவரது கால் சுவடுகளை, கோவில்  நுழைவு வாயிலில், கோலங்களாக பச்சரிசி மாவில் அச்சிட்டிருந்தனர். கிருஷ்ணருக்கு பிடித்த, பால்,  தயிர், வெண்ணெய், நெய் மற்றும் இனிப்பு  வகைகளை தயாரித்து, வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar