மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதி கோவில்களில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் மகாமாரியம்மன் மற்றும் மல்லாபுரம் மாரியம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை கள் நடந்தது. தொடர்ந்து கூழ் குடங்களை பக்தர்கள் சுமந்தபடி, ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். மாலை சக்தி கரகம் எடுத்துவரப்பட்டு, சுவாமிகளுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.