நாயக்கன்பேட்டை: நாயக்கன்பேட்டை வேணுகோபாலன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நட ந்தது. வாலாஜாபாத் அடுத்த நாயக்கன்பேட்டை கிராமத்தில், ருக்குமணி சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடை பெறுவது வழக்கம். நடப்பாண்டு கிருஷ்ண ஜெ யந்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம், காலை , 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம், மாலை , 6:00 மணிக்கு தொட்டில் உற்சவம் நடந்தது. இந்த உற்சவத்தில் வேணுகோபாலசுவாமி தொட்டில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமவாசிகள் தொட்டிலில் எழுந்தருளிய கிருஷ்ணரை வணங்கினர்.