பரமக்குடி: பரமக்குடி அருகே அரசநகரி கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலை முதல் மதியம் வரை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை கும்ப பூஜை, இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக காலை தேவிமஹாத்மிய பாராயணம், 108 சங்காபிஷேகம், மகா பூர்ணாகுதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி அம்மனுக்கு மண்டலாபிஷேகம் நடந்தது. இரவு புஷ்பாஞ்சலி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி சுப்பம்மாள் குருந்தலிங்கம், அறங்காவலர் கண்ணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.