திருவாடானை: திருவாடானை, அச்சங்குடி, செங்கமடை, நரிக்கன்வயல், இளமணி, சம்பூரணி கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பால், பறவை காவடிகள் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திகடன் நிறைவு செய்தனர். மதியம் அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.