விவாகரத்து கேட்டிருக்கிறீர்களா! இதோ இதைப் படியுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2016 04:09
நீங்கள் கணவர் அல்லது மனைவி மீது, ஏதோ காரணத்தால் கோபித்து விவாகரத்துக்கு விண்ணப்பித்துஇருக்கிறீர்களா! இதைப் படியுங்க! ஒரு சமயம் சிவபெருமான் மீது பார்வதிக்கு கோபம் எழுந்தது. அது பெயரளவில் இருந்ததே தவிர, அம்பிகையின் ஆழ்மனதில் அன்பே மேலிட்டு இருந்தது. இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவள் மவுனம் காத்தாள். சிவனும் மனைவியின் பொய்க் கோபத்தை தெரிந்து கொண்டார், அவளருகே சென்று தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். இந்த நேரத்தில் அங்கிருந்த பால கணபதி, தன் தந்தை சிவனின் தலையில் இருந்த பிறைச்சந்திரனின் அழகில் மயங்கி, துதிக்கையால் இழுக்க முயன்றார். சிவனும் கணபதியின் விளையாட்டை ரசித்து அணைக்க முயன்றார். அம்பிகையும் பிள்ளையை அணைத்தாள். அப்போது சிவன், பார்வதி இருவரது கைகள் மோதிக் கொண்டன. கணபதியின் பிள்ளை விளையாட்டால் சிவபார்வதியின் ஊடல் மறைந்து ஒன்று சேர்ந்தனர். இந்த வரலாறைப் படித்தவர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டால், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பார். ராம சாஸ்திரிகள் இயற்றிய சீதா ராவண ஸம்வாதம் என்னும் நுõலிலுள்ள விநாயகர் துதியில் இந்த வரலாறு இடம் பெற்றுள்ளது.