கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரியில் உள்ள சப்ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவில், டான்சி வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசக்தி விநாயகர் கோவில், அம்மன் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், காந்தி நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், ராசு வீதியில் உள்ள மஹா கணபதி கோவில் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஓசூரில் விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில், ஆயிரம் இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.