சமர்ப்பண சேவை மையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2016 12:09
விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைந்துள்ள சமர்ப்பண சேவை மையத்தில், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் வால்மிகி தெரு, மாதவம் கட்டடம் சமர்ப்பண சேவை மைய சக்தி கணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சக்தி கணபதிக்கு, சந்தன அபிஷேகம், இளநீர், பால் மற்றும் சொர்ண அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து, சக்தி கணபதி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மாதவம் நிர்வாகத்தை சேர்ந்த முரளி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.