பதிவு செய்த நாள்
07
செப்
2016
12:09
சங்ககிரி: தேவூர் அருகே, ஓங்காளியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.தேவூர் அருகே, காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சி, கே.மேட்டுபாளையத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று காலை, முதற்கால பூஜை நடக்கிறது. காவேரிபட்டி ஆற்றில் தீர்த்த குடம் எடுத்தல், மாலை, 6மணிக்கு விநாயகர் வழிபாடு, சங்கல்பம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ஆகியவை நடக்கிறது. நாளை, இரண்டாம் கால பூஜை நடக்கிறது. காலை, 7.40 மணிக்கு மேல் கும்பாபிஷேக விழா நடக்கிறது.