சிறுவயல்புரியில் உள்ள விநாயகர் பச்சைக் கல்லில் வடிவமைக்கப்பட்டவர். எட்டையபுரம் மன்னர் வழிபட்டு வந்த விநாயகருக்கு பட்டத்துப் பிள்ளையார் என்று பெயர். கணபதி வட்டம் என்னுமிடத்தில் உள்ள விநாயகர், திப்புசுல்தானால் நிறுவப்பட்டவர். ராவணனிடம் குட்டுப் பெற்றவர், திருக்கோகர்ணம் விநாயகர். நரிமணம் என்ற ஊரில் உள்ள விநாயகரை தலையில் குட்டியே வணங்குகின்றனர். திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் வழிபட்ட பிள்ளையார் உள்ளார். அவரை ஐங்கரப்பண்டிதன் என்பர். திருப்பெண்ணாகடத்தில் ஒன்பது விநாயகர்கள் ஒரு சேரக் காட்சி தருகின்றனர். நன்னிலம் அருகில் உள்ள திருப்பனையூரில் கரிகாற்சோழனுக்கு துணை செய்த பிள்ளையார் இருக்கிறார்.