ரிண விமோசன கணபதியை கைதொழுதால் கவலைகள் தீர்வதுடன், கடன் தொல்லையும் தீர்ந்து நிம்மதி அடையலாம். திருவாவடுதுறையில் திருமுறை கண்ட விநாயகரைப் போல குன்றத்தூர் காத்யாயனி அம்மன் கோயிலில் கடன் தீர் பதிகம் கொண்ட தோரண கணபதி அருள் தருகிறார். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, சதுர்த்தி தினங்களில் இவர்முன் ஐவகைப் பழங்களை வைத்து இவருக்கு உரிய பதிகத்தை மூன்று முறை பாராயணம் செய்து மூன்று நெய் தீபங்களை ஏறறி வைத்து வழிபட்டால் கடன் தொல்லை தீரும்; கொடுத்த கடன்களும் திரும்ப வரும் என்பது நம்பிக்கை. இவரை ஆறு வாரங்கள் தரிசித்து நெய் தீபம் ஏற்றினால் தொழில், வியாபாரத்தில் உண்டாகின்ற தேக்க நிலையை நீக்குவார். குன்றத்தூர் முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் காத்யாயனி தேவி கோயில் உள்ளது.