திருச்சி மத்தியப்பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ளது ஞான விநாயகர் கோயில். ஞானிகள் பலர் வழிபட்ட காரணத்தாலும், தன்னை வணங்குவோர்க்கு ஞானத்தை வழங்குவதாலும் இவர் ஞான விநாயகர் என அழைக்கப்படுகிறார். திருமணம் நடக்க கலைஞானம் பெருக, வெளிநாடு செல்ல அருள்தரக்கூடியவர் இந்த விநாயகர்.