சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஆண்டாள் தெருவில் உள்ளது குபேர கணபதி கோயில். அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். ஈசானிய மூலையில் உள்ள சித்தி விநாயகரை வணங்கி கிரிவலம் தொடங்கும் பக்தர்கள், இறுதியில் குபேர திக்கில் உள்ள இந்த குபேர கணபதியை வணங்கி கிரிவலத்தை நிறைவுசெய்கின்றனர். இந்த விநாயகரை அர்ச்சனை செய்து வணங்கினால் செய்வினைக் கோளாறுகள், ஏவல், பில்லி, சூன்யம், விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.