Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் ... நீலகிரியில் விண்ணை பிளந்த கணேச கோஷம்! நீலகிரியில் விண்ணை பிளந்த கணேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் இந்திர விமானம் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
திருநள்ளார் கோவிலில் இந்திர விமானம் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

09 செப்
2016
11:09

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு, புதிதாக செய்யப்பட்டுள்ள இந்திர விமானத்தின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. காரைக்கால், திருநள்ளாரில் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளாருக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய விழாக்களில், இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடப்பது வழக்கம். இந்திர விமானம் மிகவும் பழுதடைந்ததால், புதிதாக செய்வதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, ரூ.12 லட்சம் மதிப்பில்,  15 அடி உயரம், 6 அடி அகலம், 3.5 டன் எடை கொண்டதாக, புதிய இந்திர விமானம் செய்யப்பட்டுள்ளது. பர்மா தேக்கு மரத்தில் குதிரை, பிரம்மா உள்ளிட்ட சுவாமி சிலைகளுடன் பணிகள் முடிக்கப்பட்டு, சப்பரம் மற்றும் இந்திர விமானத்திற்கு சிறப்பு பூஜையும், மகா தீபா ராதனையும் நடந்தது. தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், சார்பு ஆட்சியர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் வடம் பிடித்து, வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகளில் இந்திர விமானம் சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar