விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் பிடாரி அம்மன் கோவில் மற்றும் கெங்கையம்மன், ஸ்ரீராசாலியப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று காலை ௧௦:௩௦ மணியளவில் கெங்கையம்மன், ராசாலியப்பன், பிடாரிம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை, வெங்கடேஷ்பாபு பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.