தாண்டிக்குடி, தாண்டிக்குடி அருகே கே.சி.பட்டி செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜையில் தீர்த்தம் அழைத்தல், சோம கும்ப பூஜை, சூரிய பூஜை, துவார தோரண பூஜை, தேவபாராயணம், ஷண்ணவதி ஹோமம், திருமுறை விண்ணப்பம், பூர்ணாஹூதி, யாத்ராதானத்தை தொடர்ந்துகலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், ரமேஷ் பட்டேல், ஊராட்சி தலைவர் நாகராஜன் கலந்து கொண்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.