பதிவு செய்த நாள்
09
செப்
2016
12:09
ராசிபுரம்: புதுப்பாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 11ம் தேதி, நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, புதுப்பாளையத்தில், செல்வவிநாயகர், வேதநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், கும்பாபிஷேக விழா, வரும், 11ம் தேதி நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று மாலை, 5:00 மணிக்கு, விக்னேஸ்வரர் பூஜையுடன், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குடங்களுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். மேலும், நேற்று நடந்த விழாவில், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், சிலம்பாட்டம், உருமியாட்டம், கிராமிய நடனம், மாஸ்க் நடன விளையாட்டு, நையாண்டி மேளத்துடன், வாண வேடிக்கை நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.