பதிவு செய்த நாள்
09
செப்
2016
12:09
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே, தோரமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஜலகண்டாபுரத்தை அடுத்த, தோரமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம் 17 ந்தேதி, முகூர்த்தகால் போடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, 64 பைரவர் பூஜை, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இரண்டு நாட்களாக நடந்த யாக பூஜையை தொடர்ந்து, நேற்று காலை, நான்காம் கால யாகபூஜை, அதையடுத்து, 11 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.