கீழக்கரை: பெரியபட்டினம் செய்யதலி ஒலியுல்லா தர்காவில் 115ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு இன்று கொடி ஏற்றப்படுகிறது. முன்னதாக கொடி ஊர்வலம் நடக்கிறது. தினமும் மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக செப்.,19ம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. செப்., 30ல் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பெரியபட்டினம் சுல்தானியா சங்கம் சந்தனக்கூடு விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.