Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையின் புனிதம் காக்கப்படுமா? திருப்பரங்குன்றம் சரவணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா

பதிவு செய்த நாள்

12 செப்
2016
05:09

செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு சேடஷ தசாச்சர்ய மகா மேரு ஸ்ரீசக்ர யாகம் நடந்தது.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள செல்லபிராட்டியில் உள்ள லலதா செல்வாம்பிகை கோவிலில் 9வது ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 10ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கோவிலை சுற்றி அஷ்ட திக்கில் அமர்ந்துள்ள கிராம தேவதைகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது.

 11ம் தேதி லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடந்தது. இன்று(செப் 12ல்) காலை 7 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். 9 மணிக்கு லலிதா செல்வாம்பிகை உள்ளிட்ட 16 தேவதைகளுக்கும் உண்டனா புஷ்பம், வஸ்திரம், திரவியங்களை கொண்டு சேடஷ தசாச்சர்ய மகா மேரு ஸ்ரீசக்ர யாகம் நடந்தது. பகல் 2 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து அம்மனுக்கு கலசாபிஷேகம், மகா புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதானையும் நடந்தது. பக்தர்களுக்கு மூன்று நாட்களும் அன்னதானம் நடந்தது. பூஜைகளை சேந்தமங்கலம் கணேச சிவாச்சாரியார், ஈஸ்வர சிவம் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். அறங்காவலர் கன்னியப்பன், அறிவழகன் ஸ்தபதி, விழா குழுவினர் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar