Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உன்னத திருவிழா! எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
என்ன வேலை என சிந்திக்காதீர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
05:09

கஷ்டப்படுவோரில் பலர் அதில் இருந்து மீளும் வழியைப் பற்றி சிந்திக்காமலும், தங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்க கடவுளிடம் வேண்டாமலும் தற்கொலைக்கே முயல்கிறார்கள். ஒரு குடும்பத்தில் கஷ்டம் தாண்டவமாடியது. அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஏதாவது கடைப்பக்கம் போனாலே, உரிமையாளர்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். இதையும் மீறி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறு பையன் ஒருவன், பசி தாங்காமல் ஒரே ஒரு ரொட்டி மட்டும் கடனுக்கு கேட்டான். அந்த வியாபாரியோ பையனுக்கு திருட்டுப்பட்டம் கட்டி உதைத்து அனுப்பி விட்டான். இதைத் தாங்க முடியாத அந்த குடும்பத்தலைவி, அந்தச் சிறுவனுடன் தற்கொலைக்கு முயன்றாள். அதைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டிலுள்ள இரக்கமுள்ள ஒரு ஏழைப் பெண், “இது என்ன கோழைத்தனம்! கஷ்டம் வந்தால் போராட வேண்டும்.

நான் கணவனை இழந்தவள். இரண்டு குழந்தைகளை வளர்க்க வீடுகளில் பாத்திரம் தேய்க்கிறேன். கிடைப்பதைக் கொண்டு சாப்பிடுகிறேன். என்றேனும் ஆறுதல் கிடைக்குமென்ற நம்பிக்கையில் இயேசுவிடம் தொடர்ந்து ஜெபிக்கிறேன். பைபிளில் சொல்லப்பட்டுள்ள வசனம் ஒன்றை வாசிக்கிறேன் கேள்! ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் கஷ்டத்தை கடவுளிடம் விட்டுவிடுங்கள்! உன் கணவனும், நீயுமாய் சேர்ந்து உழையுங்கள். குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். என்ன வேலை என சிந்திக்காதீர்கள். கிடைத்த வேலையைச் செய்து, குறைந்த வருமானத்தில் காலம் கழிக்க பழகுங்கள் தேவன் நன்மையை விரைவில் தருவார்,” என்றாள். ஆம் இன்பம், துன்பம் இரண்டுமே கடவுளால் தரப்படுபவை தான். அவற்றை ஏற்று, துன்பங்கள் குறைய அவரையே ஜெபிக்க வேண்டும். கடவுள் வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நம்பிக்கை அவசியம் வேண்டும். மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே.

வெற்றியில் பாதியை கொடுத்துவிடுகிறது. நம்பிக்கையின் அவசியம் பற்றி இயேசுநாதர் உதிர்க்கும் முத்தான மூன்று பொன்மொழிகள் இதோ:

*நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, “கடலில் பெயர்ந்து விழு” என்றாலும் அப்படியே நடக்கும்.
*நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள்.
*நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான். இத்தகைய இதயம் உங்களில் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar