எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு துன்பம் தராமல் வாழ முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2016 05:09
மூன்றையும் வரிசைப்படுத்தி இருப்பது நன்றாக உள்ளது. எண்ணம் நன்றாக இருந்தால் சொல் நன்றாக இருக்கும். எண்ணமும், சொல்லும் நல்லதாக இருந்தால், செயல்கள் பிறருக்கு துன்பமில்லாததாக அமையும். நாம் நல்லவராக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள சமூக சூழ்நிலை நம் மனதை மாற்றக் கூடும். அதிலிருந்து மீண்டு விட்டால் எந்த சூழலிலும் நல்லவராக வாழலாம். இதற்கு மனப்பயிற்சி அவசியம். புத்தி கூறும் நல்ல விஷயங்களை மனம் முதலில் கேட்க வேண்டும். இதை மனக்கட்டுப்பாடு, மனோபலம் என்று சொல்வர். இதை வழங்கும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. அவரைச் சரணடைந்தால் யாருக்கும் துன்பம் தராமல் நல்லவனாக வாழலாம்.