கிருஷ்ணராயபுரம்: கருப்பூரில் கட்டப்பட்டுள்ள விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பூரில், புதிதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 10 மணிக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின், தீர்த்த குடங்களை எடுத்து கொண்டு, கருப்பூர் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.