Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் ... மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை ஒட்டகங்களுக்கு மப்டி போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2016
12:09

திருநெல்வேலி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்பட பல்வேறு இஸ்லாம் அமைப்பினர் மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், ஏர்வாடி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லை தவ்ஹீத் ஜமாஅத், த.மு.மு.க.,சுன்னத் ஜமாத், மறுமலர்ச்சி த.மு.மு.க.,உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தொழுகை மேற்கொண்டனர். ஆயுதப்படை சிந்தாமதார் ஷா பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் தி.மு.க.,எம்.எல்.ஏ.,டி.பி.எம்.,மைதீன்கான் பங்கேற்றார். பேட்டை, தாழையூத்து, உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. பெருநாள் தொழுகைக்குப் பின்பு குர்பானி பிராணிகளை அறுத்து அதை ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

ஒட்டகத்தி்ற்கு போலீஸ் பாதுகாப்பு:
பக்ரீத்தின்போது, ஏழை எளிய மக்களும் இறைச்சி வழங்க கடந்த ஆண்டைப்போலவே இரண்டு ஒட்டகங்களும் வரவழைக்கப்பட்டிருந்தன. ஆடு, மாடு அறுப்பதற்கு அறுப்பு மனைகள் இருப்பதுபோல ஒட்டகங்களையும் அறுப்பதற்கு மனை ஏற்படுத்தவேண்டும் இல்லாவிட்டால் ஒட்டகத்தை பலியிடக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனால் கடந்த நான்கு நாட்களுக்குமுன்பாக வந்த ஒட்டகங்கள் மேலப்பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன. கோர்ட் உத்தரவினால் அவை பலியிடப்படாமல் பார்த்துக்கொள்ள ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் மூன்று போலீசார் சாதாரண உடையில் இரவும்பகலும் அங்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று பக்ரீத் முடிந்துவிடுவதால் இனி ஒட்டகங்கள், வாங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பப்படும் எனவும் தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar