பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
கல்லாநத்தம்: கல்லாநத்தம், கருப்பண்ணார் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. ஆத்தூர் அருகே, கல்லாநத்தம், ஏரிக் கரையில், பழமையான கருப்பண்ணார் கோவில் உள்ளது. அங்கு, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பெரிய அளவிலான, குதிரை மற்றும் கருப்பண்ணார் சுவாமி சிலை கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, 5:00 மணியளவில், அக்கோவில் கும்பாபிஷேகம் துவங்கியது. காலை, 6:00 மணியளவில், யாக வேள்வி பூஜை, கோ பூஜை நடந்தது. பின், 9:30 மணியளவில், வேத மந்திரம் முழங்க, குதிரை மற்றும் கருப்பண்ணார் சிலைகளுக்கு, கல்லாநத்தம் ஊராட்சி தலைவர் கர்ணன், விழாக்குழுவினர், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். அதில், ஆத்தூர், கல்லாநத்தம், முட்டல், செட்டில்மண்ட் பகுதிகளை சேர்ந்த, ஏராளமான மக்கள், வழிபாடு செய்தனர்.