பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
பெத்தநாயக்கன்பாளையம்: மத்தூரில், மாரியம்மன் கோவில், முதலாம் ஆண்டு தேர் திருவிழா, நேற்று நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து, மத்தூர், மாரியம்மன் கோவிலில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய தேர் செய்யப்பட்டது. அதையொட்டி, ஆக., 30ம் தேதி, பூ போடுதலுடன், திருவிழா துவங்கியது. தேர் திருவிழாயொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, சின்னகிருஷ்ணாபுரம், பெரியகிருஷ்ணாபுரம், வைத்தியகவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, முக்கிய பிரமுகர்களை, மேள, தாளத்துடன் கோவிலுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு, மரியாதை செய்யப்பட்டது. பின், வெங்கடதாரஹள்ளி தமிழ்செல்வன் குழுவினரின் இசையுடன், கோவில் வளாகத்தை சுற்றி, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், வடம்பிடித்து, தேரை இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.