பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி மற்றும் பூந்தோட்டம் ஆகிய பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 12ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் துவங்கிய இந்த விழாவில், அம்மனுக்கு சிறப்பு பூஜை, பொங்கல் வைத்தல், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி, தினமும் இரவில் இளைஞர்கள் பங்கேற்ற கோலாட்டம் நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக உறியடித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிவ் கடைசி நாளான நேற்று, பாப்பாரப்பட்டி மற்றும் பூந்தோட்டம் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். விழாவில், 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து வைத்தனர். மா விளக்கு ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, டவுன் இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.