பதிவு செய்த நாள்
16
செப்
2016
12:09
தலைவாசல்: தலைவாசல், பெரியேரியில், வசிஷ்ட நதிக்கரை வட பகுதியில், அங்காளம்மன் கோவில் கட்டுமான பணி சமீபத்தில் முடிந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்தபின், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள், மந்திர
புஷ்பங்கள் ஓத, புனிதநீர் ஊற்றி, மூலவரான அங்காளம்மனுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், செல்வ கணபதி, ஈஸ்வரன், செல்வ பாலமுருகன், பாவாடை ராயன் மற்றும் வீரபத்திரன் ஆகிய தெய்வங்களுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. பின், 108 அபிஷேகங்கள் செய்து, சிறப்பு அலங்காரத்தில், அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூர்,
கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், அம்மன் அருள் பெற்றனர்.