அவலுார்பேட்டை: வடுகப்பூண்டி வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வடுகப்பூண்டி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூமி தேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை புன்னியாஹம், அக்னி ஆராதனம், ததுக்த ேஹாமங்கள் மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானமும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது.