பதிவு செய்த நாள்
16
செப்
2016
01:09
காடையாம்பட்டி: புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி, காருவள்ளி சின்னத்திருப்பதி வெங்கட்டரமண கோவிலில், நாளை, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. காடையாம்பட்டி தாலுகா, காருவள்ளி, சின்னதிருப்பதி வெங்கட்டரமண கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி, வாரம்தோறும் சனிக்கிழமை அதிகாலை, 4:30 மணிக்கு, நடை திறந்து, மூலவர் சிலைக்கு, வேத மந்திரம் முழங்க, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். இரவு, 7:30 மணி வரை, நடை திறந்திருக்கும். உற்சவர் சிலைக்கு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படும். ஐந்தாவது வாரத்தில், கோவில் தேரோட்டம் நடக்கும் என, கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை தெரிவித்துள்ளார்.