பதிவு செய்த நாள்
16
செப்
2016
01:09
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, வேங்காம்பட்டியில் உள்ள ரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கிருஷ்ணாரயபுரம் யூனியன், கருப்பத்தூர் பஞ்., வேங்காம்பட்டியில் ரங்கநாதர் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று காலை இரண்டாம் கால
யாக பூஜை நடந்தது. பின்னர், ரங்கநாதர் சுவாமி கலசத்திற்கு, அய்யர்மலை சிவராஜ் சிவாச்சாரியார் தலைமையில், புனித நீர் ஊற்றப்பட்டது. வேங்காம்பட்டி, சாலப்பட்டி, பங்களாபுதூர், குப்புரெட்டிபட்டி, சித்தாம்பூர், முசிறி, பசுக்காரன்பட்டி, பெரமங்களம் போன்ற பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.