திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி மாத சனி உற்சவம்: அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2016 01:09
ஸ்ரீவில்லிபுத்துார்: புரட்டாசி சனி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில், நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆண்டாள் கோயில், காட்டழகர் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர். ஸ்ரீவி. டி.எஸ்.பி. சின்னையா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.